Saturday, July 19, 2008

கேள்விழியின் கேள்விகள் - 1

காட்சி - 1 - ஒரு சாதாரண fancy கடை, வேலூர் :

திவ்யா - Face powder iruka ?
கடை பெண் - இருக்கே. இத பாருங்க 100 ரூபாய்.
திவ்யா - இவ்ளோ காசுல வேணாம். கம்மி விலைல கிடைக்காதா?
கடை பெண் - 60 ரூபாய் ல இருக்கு. பாக்கறிங்கள ?
திவ்யா - இன்னும் கம்மியா ?
கடை பெண் - இன்னும் கம்மியனா, 30 ரூபாய்ல இருக்கு. Made in india. Local sarakku.
திவ்யா - அப்படினா 60 ரூபாய் தே குடுங்க.


காட்சி - 2 - ஊட்டி - தேயிலை தோட்டம்

அதிகாரி - இது தான் எப்படி தேயிலையை டீ தூளாய் மாற்றும் நிலைகள் ( Process). எங்க தேயிலை தோட்டத்துக்கு வந்ததுக்கு மிக்க நன்றி. இப்படி வாங்க..

நாங்க பின் தொடர்ந்தோம்..

அதிகாரி - இந்த டீ தூள் விற்பனைக்கு. எல்லாமே Export quality. லோக்கல் ல எங்கயும் இது கிடைக்காது. உங்களுக்காக தரோம்.

முனுமுனுப்பு - Export quality னா நல்லா தான் இருக்கும்.

திவ்யா - எனக்கு 5 packet குடுங்க.

காட்சி - 3 - சென்னை - வேலூர் பேருந்து

திவ்யா - நீங்க என்ன பண்றீங்க?
பக்கத்தில் இருப்பவர் - நான் குடியாத்தம் -ல பண்ணை வச்சு இருக்கேன்
திவ்யா - ஒ
ப. இ - பண்ணையோட சேத்து தேங்காய் துருவுற மிஷன் வாங்கி போட்டு இருக்கோம்.
திவ்யா - துருவி என்ன பண்றீங்க?
ப . இ - வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்றோம்.
திவ்யா - Nice. இங்க விக்கறது இல்லையா?
ப. இ - இல்லைங்க. இங்க எல்லாம் யாருக்கு தேங்காய் தூள் தேவை இருக்கும். அங்க nutrine company -ல உபயோகமா இருக்கும். இங்க யாரு இங்க இருக்க பொருளை மதிக்கறாங்க.
திவ்யா - சரி தான்.

காட்சி - 4 - plano, USA - bhatiya mall
திவ்யா - இதுல ரெண்டு மிளகாய் பொடி இருக்கு. இதுல எது நல்லா இருக்கும்.

கடைக்காரர் - ஒன்னு USa made. ஒன்னு India made.
திவ்யா - அப்போ indian made குடுங்க. அது தான் நல்லா இருக்கும். :)

-------------------------------------------------------------------------------------------------
ஏன் இந்தியால தயாரிக்கற பொருளை - இந்தியால மதிக்கறது இல்லை ?
-------------------------------------------------------------------------------------------------
பி.கு - bhattiya mall - இந்திய பொருட்கள் கிடைக்கும் ஒரு இடம்.

No comments: